தமிழகம்: படிக்க வந்த மானிகளுக்கு பாலியல் தொல்லை! தலைமறைவான மருத்துவர்!
thirupathur student abuse case
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவிகள் மீது மருத்துவமனை உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
அந்த மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் ஜாவித் மாணவிகளிடம் அனுமதியில்லாமல் நெருங்கி பாலியல் தொல்லை மற்றும் அருவருப்பான நடத்தை காட்டியதாகக் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் மாணவிகளை அதிர்ச்சிக்குள்ளாக்க, அவர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவரிடம் இதனை பகிர்ந்துள்ளனர்.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது விபரங்களை உரிய முறையில் பதிவு செய்தனர் எனக் கூறப்படுகிறது.
மாணவிகளின் வாக்குமூலம், உரிமையாளரின் தவறான நடத்தை குறித்து தெளிவாக கேட்டறிந்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய தீவிரமாக தேடிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
thirupathur student abuse case