இடதுசாரி முன்னணியின் கோட்டையை தகர்த்த பாஜக கூட்டணி; திருவனந்தபுரத்தில் மேயராகும் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீலேகா..? - Seithipunal
Seithipunal


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களில்வெற்றி பெற்றிருந்தாலும், ஆளும் கட்சியினர் தோல்வியை சந்தித்துள்ளனர். குறிப்பாக, இடதுசாரிகளின் கோட்டையான திருவனந்தபுரத்தில் மாநகராட்சியை பாஜ கூட்டணி கைப்பற்றியுள்ளது. 

கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலின் போது, வெற்றி பெற்ற இடதுசாரி முன்னணியின் பெண் உறுப்பினர் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் இளம்மேயராக பதவியேற்றார்.

இடதுசாரிகள் பலம் பொருந்திய திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு தேவையான வார்டுகளில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் சாஸ்தாமங்கலம் வார்டில் பாஜ கூட்டணியின் வேட்பாளரான ஸ்ரீலேகா வெற்றி பெற்றிப் பெற்றுள்ளார். கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், மாஜி டிஜிபியுமான ஸ்ரீலேகா தமது டிஜிபி பணிக்காலத்தை முடித்த அவர், பாஜவில் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார்.

சாஸ்தாமங்கலம் வார்டில் வெற்றி குறித்து ஸ்ரீலேகா கூறியதாவது; சாஸ்தாமங்கலம் வார்டில் இதற்கு முன்னர் வேறு எந்த வேட்பாளரும் இவ்வளவு முன்னிலையில் வெற்றி பெற்றது இல்லை என்பதை அறிந்தேன். இப்படியான தீர்ப்புக்காக மக்களுக்கு நன்றி கூறுகிறோம்.

யார் மேயராக அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என்பதை கட்சி மேலிடம் தான் முறைப்படி அறிவிக்கும்.'' என்று ஸ்ரீலேகா கூறியுள்ளார்.

யார் இந்த ஸ்ரீலேகா..?

கேரளா காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிபிஐ, குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு, சிறை, மோட்டார் வாகனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற இவர், இதன் மூலம் கேரளாவில் டிஜிபி பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

33 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த அவர், 2020-இல் ஓய்வு பெற்றார். இருப்பினும் பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைதாகி விடுவிக்கப்பட, அவர் தவறாக சிக்க வைக்கப்பட்டார் என்று தெரிவித்த கருத்தால் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டவர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு பாஜவில் தம்மை இணைத்துக் கொண்ட ஸ்ரீலேகா, தற்போது அரசியலிலும் இறங்கி உள்ளாட்சித் தேர்தலில் பெற்று பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former DGP Sreelekha to become the mayor of Thiruvananthapuram


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->