பச்சிளம் குழந்தையை அடித்து கொலை செய்தது ஏன்?... இரண்டாவது கணவன் பரபரப்பு வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சல் கிராமத்தை சார்ந்தவர் சிவசக்தி (வயது 22). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் வேலூரில் உள்ள சத்துவாச்சாரி பகுதியை சார்ந்த லாவண்யா (வயது 20) என்ற பெண்மணியை, கடந்த 2017 ஆம் வருடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் ப்ரவீனா என்ற 2 வயதுடைய மகள் இருக்கிறார். 

இந்நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், லாவண்யா தனது குழந்தையுடன் சத்துவாச்சாரியில் இருக்கும் தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில், காட்பாடியை அடுத்துள்ள கே.வி.குப்பம் அருகேயுள்ள தேவரிஷி குப்பம் பகுதியை சார்ந்த பிரவீன் குமார் (வயது 22) என்ற வாலிபரை இரண்டாவதாக லாவண்யா திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இந்த தருணத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக லாவண்யா தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை சிலமணிநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பின்னர் குழந்தையின் உடலை சிவசக்தியிடம் ஒப்படைத்துள்ளார். இதில் குழந்தையின் மரணம் குறித்து சிவசக்தி கேட்கையில், சரியான பதில் வரவில்லை. 

இதனால் பெரும் அதிர்ச்சியான சிவசக்தி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில் தனது மனைவி மற்றொரு திருமணம் செய்து, தனது குழந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில், குழந்தையின் மரணத்திற்கான காரணாம் தெரியவந்துள்ளது. மேலும், பிரேத பரிசோதனையில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

பிரவீன் குமார் மற்றும் லாவண்யா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரவீன்குமாரிடம் லாவண்யா தனது திருமணம் முடிந்து குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், குழந்தை லாவண்யாவின் தாயாருடன் சத்துவாச்சாரியில் இருந்துள்ளது. பெற்றெடுத்த குழந்தையை பிரிய மனமில்லாது, குழந்தையை தேவரிஷி குப்பத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

இதன்பின்னரே பிரவீனிற்கு திருமணம் மற்றும் குழந்தை தொடர்பான தகவல் தெரியவரவே, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் பச்சிளம் குழந்தையை தூக்கில் தரையில் அடிக்கவே, குழந்தையின் தலை தரையில் பலமாக பட்டு மயங்கியுள்ளது. 

இதன்பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று உடல்நிலை சரியில்லை என்று கூறியதும், கொலையை மறைக்க குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக நாடகம் ஆடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாவண்யா மற்றும் பிரவீனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathur child murder her mother and second husband arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal