காதல், குழந்தை திருமணம்: பெற்ற மகளினால் ரெயில் மீது பாய்ந்து பெற்றோர் தற்கொலை!
thirupathur child marriage parents suicide
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே ஜெகதேவி பகுதியை சேர்ந்த குமார் (வயது 50) மற்றும் அவரது மனைவி கவிதா, மக்களின் திருமணத்தால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதலித்து வந்தார். இரு குடும்பங்களின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.
ஆனால், காதலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், வாலிபரின் பகுதியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதை தொடர்ந்து, குழந்தை திருமணம் என புகார் பர்கூர் போலீசில் அளிக்கப்பட்டது.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, விஷம் குடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், பர்கூர் போலீசார் சிறுமியின் பெற்றோர்மீது குழந்தை திருமண வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்தனர்.
வழக்கு காரணமாக முன்ஜாமீன் பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்ல திட்டமிட்டிருந்த தம்பதிகள், திடீரென விரக்தியில் ரெயிலில் பாய்ந்து உயிரிழந்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thirupathur child marriage parents suicide