குழந்தைகளுக்கும் இலக்கியத்தைக் கொண்டு செல்வது நமது கடமை - அன்பில் மகேஷ் பேச்சு.! - Seithipunal
Seithipunal


இன்று திருநெல்வேலியில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி கட்சி மூலம் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். 

இதில், கலந்துகொண்ட பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்ததாவது:- "மொழியை காப்பதற்கு மொழிப்போரும் எங்களால் நடத்தமுடியும் என்பதை பெருமைபடுத்துவதற்கே இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

இந்தியாவிற்கே முன்னோடியாக அமைந்த திட்டம் தான் இல்லம் தேடி கல்வி திட்டம். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. 

தமிழகத்தில் தமிழ் சாகித்ய அகாடமி அமைப்பது குறித்த கோரிக்கைளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசு தமிழின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக செயல்பட்டு வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு மிகவும் பெருமையாக உள்ளது. குழந்தைகளுக்கும் இலக்கியத்தை கொண்டு செல்வது என்பது நம்மளுடைய கடமையாக உள்ளது. 

ஆனால், அடிப்படை வாசிப்பை கூட பிற்போக்குவாதிகளின் பேராயுதமாக மாற்ற நினைக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் எழுத்தாளர்களுக்கும், எழுத்துக்கும் கொடுக்கும் முக்கியதுவத்தின் அடையாளமே கனவு இல்ல திட்டம்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirunelveli Borunai Literary Festival educational minister speach


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->