“சாதிய மோதல்களுக்கு ஜல்லிக்கட்டு காரணமாகும் ஆபத்து” - எச்சரிக்கும் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழும் போக்குகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக மாறிவிடக் கூடிய ஆபத்து இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். 

விலங்குகள் உரிமை என்ற பெயரில் சனாதன சக்திகள் தமிழ்நாட்டுக்கு எதிராகச் செய்த சதி வேலைக்கு இந்தத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கூற்று ஜல்லிக்கட்டு வழக்குக்கு மட்டுமின்றி பசுவின் மீது புனிதத்தைக் கற்பித்து பசு பாதுகாப்பு என்கிற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். 

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்பது தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்துள்ள வெற்றி! இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அவ்வாறு நடத்தப்படும் போது அதில் சாதிய பாகுபாடு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். அண்மைக்காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழ்வதைப் பார்க்கிறோம். 

இத்தகைய போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லா விட்டால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக மாறிவிடக் கூடிய ஆபத்து உள்ளது" என்பதைத் தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan say about jallikattu saathi sandai


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->