திமுக நிர்வாகி வீட்டிலையே கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே ஆர்.எல்.ராஜா என்பவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தின் முன்னாள் திமுக நிர்வாகியாவார்.இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதன் காரணமாக, கன்னியாகுமரியில் உள்ள அவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில், ராஜாவின் வீட்டு கதவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், ராஜாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அப்பொழுது உடனடியாக புறப்பட்டு வந்த ராஜா அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பீரோ உடைந்து கிடந்தது. அதிலிருந்த 22 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் திருடு போயிருந்தது. மேலும், வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை ஆகியவையும் காணாமல் போயிருந்தது.

 இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை கொண்டு சென்று ஆய்வு செய்தனர். ராஜா வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் தான் இதனை செய்திருக்க வேண்டும் என தெரிகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thief at dmk party house


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal