பொள்ளாச்சியில் பரபரப்பு...! சொகுசு மசாஜ் சென்டரில் சட்டவிரோத தொழில்...! கச்சிதமாக தூக்கிய தனிப்படை காவலர்கள்...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆயுர்வேத பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை மையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடத்தில், மறைமுகமாக பாலியல் தொழில் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மூன்று இளம்பெண்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் என்பவர், இளம்பெண் ஒருவருடன் இணைந்து பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் ஆயுர்வேத பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் கிளினிக் என்ற பெயரில் மசாஜ் மையம் நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிப்படையாக சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த இந்த இடத்தில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவதாக மகாலிங்கபுரம் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, காவலர்கள் வாடிக்கையாளர்களைப் போல் நடித்து அந்த மையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு மூன்று இளம்பெண்களை பயன்படுத்தி பாலியல் தொழில் நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இளம்பெண்களை காவலர்கள் மீட்டு, சட்ட நடவடிக்கையின் கீழ் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை வழங்கப்படுவதாக இணையவழி முன்பதிவுகள் மேற்கொண்டு, அதன் பின்னணியில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருவரை நீதிமன்றக் காவலில் ஒப்படைத்ததுடன், மற்ற இரண்டு இளம்பெண்கள் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த மையத்தை நடத்தி வந்ததாக கூறப்படும் உரிமையாளர் அனீஸை கைது செய்வதற்காக காவலர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இதுபோன்ற நடவடிக்கைகள் எவ்வளவு காலமாக நடைபெற்று வந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There stir Pollachi Illegal business luxury massage center Special forces policemen who pulled it off perfectly


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->