கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை!ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயார்! -நயினார் நாகேந்திரன்!
There is no confusion in the alliance O Panneerselvam TTV Ready to meet Dhinakaran Nainar Nagendran
மதுரை: பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
“தற்போதைய சூழலில் நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், அ.தி.மு.க.வில் எந்த பிளவுகளும் இல்லை. தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை கூறியதாக பரப்பப்படுவது உண்மையல்ல. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், “ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது சாதாரணமான ஒன்று. அந்த சந்திப்பு பற்றிய முழு தகவலும் எனக்கு தெரியாது. ஆனால் அதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை,” எனவும் அவர் தெரிவித்தார்.
2026-ம் ஆண்டு தேர்தலை குறிப்பிட்ட அவர், “அந்தத் தேர்தலுக்கு பிறகு யார் ICU-வில் இருக்கிறார்கள் என்பது அப்போதே தெரியும்” என கடுமையாக விமர்சித்தார்.
English Summary
There is no confusion in the alliance O Panneerselvam TTV Ready to meet Dhinakaran Nainar Nagendran