முன்பே ஏன் பேசவில்லை...தேர்தல் வரும் போது ஏன் பேச வேண்டும்....! - செல்வப்பெருந்தகை கேள்வி
Why didnt you speak up before why should you speak up when election coming SelvaPerundagai question
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

அவர் தெரிவித்ததாவது,"தியாகி இமானுவேல் சேகரன், தமிழ் சமூக ஒற்றுமைக்காக தனது உயிரையே அர்ப்பணித்தவர். நாட்டுப்பற்றுள்ள ராணுவ வீரராக அவர் செய்த தியாகத்திற்கு காங்கிரஸ் பேரியக்கம் வணக்கம் செலுத்துகிறது,” என்று தெரிவித்தார்.அதே சமயம், சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றது நாட்டுக்கு பெருமை அல்ல என்றும், “ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவரின் பதவியேற்பு பெருமைப்படும் விஷயம் அல்ல.
முன்னாள் துணை ஜனாதிபதி தன்கரையின் கொள்கைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.மேலும், நேரு முதல் சோனியா காந்தி வரை கொண்டு வந்த திட்டங்கள் இன்று பின்னடைவை நோக்கி செல்கின்றன எனவும், “ராகுல் காந்தி பீகாரில் வாக்கு திருட்டைப் பற்றி பேசியது போலவே, துணை ஜனாதிபதி தேர்தலில் கூட ஏதேனும் வாக்கு திருட்டு நடந்ததா என்பதை பிரதமர் விளக்க வேண்டும்” என்றார்.
கூடுதலாக, “விஜய்க்கு இருக்கும் காவல் கட்டுப்பாடே இ.பி.எஸ்.க்கும் அமைய வேண்டும். அனைத்து கட்சிகளும் காவல்துறையின் விதிமுறைகளை மதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.பாஜக குறித்து கடும் குற்றச்சாட்டு எழுப்பிய அவர், “பாஜக மாநிலத்தில் நுழைந்தால் அது ஆமை புகுவது போல மெல்ல சிதைந்து போகும்.
பின்னர், மக்களுக்கு சொந்தமான அதிகாரத்தை, அம்பானி–அதானி கைக்கு ஒப்படைப்பார்கள். இதுவே பாஜக மாடல்” என்றார்.மேலும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்து, “இ.பி.எஸ். ஆட்சியில் இருந்தபோது அமைதியாக இருந்தவர், இன்று அரசியல் நலனுக்காக பேசுகிறார். உண்மையான பற்று இருந்திருந்தால், தேர்தல் வரும் நேரத்தில் அல்லாமல், அதற்கு முன்பே நடவடிக்கை எடுத்திருப்பார்” என கடுமையாக விமர்சித்தார்.
English Summary
Why didnt you speak up before why should you speak up when election coming SelvaPerundagai question