அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? முகம் மாறிய ஓபிஸ்! கொடுத்த பதில்! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒன்றிணைப்பு குறித்து விவாதங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

“2026 தேர்தலை அதிமுக ஒன்றிணைந்து சந்தித்தால் வெற்றி எங்கள் பக்கம் இருக்கும். இல்லையென்றால் திமுகவுக்கு சாதகமாகிவிடும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தொண்டர்களின் ஒருமித்த எண்ணம். அனைவரும் சேர்ந்து செயல்பட்டால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவு நிறைவேறும்” என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

“ஒன்றிணையும் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஏன் எதிராக இருக்கிறார்?” என்ற கேள்விக்கு, “அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று OPS சுருக்கமாகப் பதிலளித்தார்.

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எடுத்துள்ள முயற்சி குறித்து கேட்கப்பட்டபோது, “அவரது முயற்சி வெற்றி பெறும்” என்றார் OPS.“டிடிவி தினகரன் போல நீங்களும் நிபந்தனை விதிப்பீர்களா?” என்ற கேள்விக்கு OPS,“அரசியலில் எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று விலகி நின்றார்.

முக்கியமான கேள்வியாக, “அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்கப்பட்டபோது OPS,“பல பிரச்சினைகளை பேச வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் முடிந்த பிறகு என் கருத்தைச் சொல்கிறேன்” என்று நேரடியாக பதிலளிக்கத் தவிர்த்தார்.

அதிமுகவை பாஜக துண்டாக்கி கொண்டாடுகிறதா என்ற கேள்விக்கு OPS,“நான் அந்த மாதிரி நினைப்பதில்லை” என்று மறுத்தார்.

இதனுடன், ஏற்கனவே டிடிவி தினகரன், “எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருந்தால் கூட்டணியில் சேர முடியாது. அவரைத் தவிர வேறு யாரும் வந்தால் ஏற்றுக்கொள்வேன்” என்று நிபந்தனை விதித்த நிலையில், OPS-மும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு தெளிவான பதில் அளிக்காமல் விலகி நின்றது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If AIADMK merges will you accept Edappadi as the CM candidate The face of the OPS has changed The answer given


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->