செங்கோட்டையன் இல்லத்தில் வியும் அதரவாளர்கள்! ரூட்டு போட்டு கொடுத்த அமித்ஷா..? ஆட்டத்தை தொடங்கிய செங்கோட்டையன்..? - Seithipunal
Seithipunal


அதிமுக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இல்லம், கோபிசெட்டிபாளையத்தில் இன்று அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை நேரத்தில், கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த அதிமுகவினர், இரண்டு சக்கர வாகனங்களில் பேரணியாக வந்து, செங்கோட்டையனைச் சந்தித்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி, அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. பின்னர், செங்கோட்டையனுடன் நீண்ட நேர ஆலோசனையிலும் ஈடுபட்டனர்.

முன்னதாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களையும், நீக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். “10 நாட்களில் இந்த ஒருங்கிணைப்புப் பணி தொடங்கப்பட வேண்டும், இல்லையெனில் நான் அதனை மேற்கொள்வேன்” என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, அவரின் கட்சி பதவிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன.

இந்நிலையில், சமீபத்தில் செங்கோட்டையன் ஹரித்துவாருக்கு செல்கிறேன் எனக் கூறி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த சந்திப்பில், அதிமுகவின் ஒருங்கிணைப்புத் தேவை குறித்து சுமார் 45 நிமிடங்கள் பேசி, “2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் வெளியே சென்றவர்களை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்” என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில், இன்று கோவையைச் சேர்ந்த அமுமுக நிர்வாகிகளும் செங்கோட்டையனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது, அவர் ஒருங்கிணைப்புப் பணியை தனிநிலையிலேயே மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fans flock to Sengottaiyan house Amit Shah who gave his support Sengottaiyan who started the game


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->