தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இன்று மதியம் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

லஞ்சம் பெற்று முறைகேடாக ஆவணங்கள் பத்திரப்பதிவு நடப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், சென்னை ஆவடி பத்திரப்பதிவு, வட்டாச்சியர் அலுவலகங்களில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகைஸ்வரி மீது ஏராளமான புகார்கள் குவிந்ததால், இந்த சோதனை நடைபெற்றதாக சொல்லபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni Vigilance Departmen raid Tamilnadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->