ஆபாச படம் காண்பித்து 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசுப்பள்ளி ஆசிரியர் பரபரப்பு கைது.! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமிக்கு காமுக ஆசிரியர் செல்போனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியர் போக்ஸோவில் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியை சார்ந்தவர் மகேந்திரன் (வயது 59). இவர் பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். 

இந்த ஆபாச படங்களை தனக்கு அறிமுகமான 17 வயதாகும் பனிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி வீட்டில் இது குறித்து தெரிவித்தால் பெற்றோர்கள் பயம் கொள்வார்கள் என்று அமைதியாக இருந்துள்ளார். 

ஒரு சமயத்திற்கு மேல் காமுகன் மகேந்திரனின் செயல்பாடுகள் மன உளைச்சலை ஏற்படுத்த, பெண்மணி பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர்கள் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மகேந்திரன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது. இதனையடுத்து, மகேந்திரனை கைது செய்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணியும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni Periyakulam Govt School Teacher Mahendran Arrested by Police sexual torture to 17 Aged girl


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->