காதலித்து கைவிட நினைத்த அத்தை மகன்.. சாம்பலாக்கிய அத்தை மகள்.! தேனியில் பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மேல்மங்கலம் வைகை புதூர் சாலையோரத்தில், கடந்த 21 ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஜெயமங்கலம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீருவீடு பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 29) கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

ஆனந்தராஜின் அத்தை கருப்பாயி வடுகபட்டியில் வசித்து வருவதாகவும், கருப்பாயியின் மகள் விஜயசாந்தி மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், விஜயசாந்தி மற்றும் அவரது சொந்தக்காரர் பிரபாகரன் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

இதன் போது, விஜயசாந்தியும் - ஆனந்த ராஜும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் வேறொரு பெண்ணுடன் ஆனந்த ராஜுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி விஜயசாந்திக்கு விஷயம் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து விஜயசாந்தி ஆனந்தராஜை வடுகபட்டிக்கு வரச்சொல்லி நியாயம் கேட்டுள்ளார். இதன்போது, பிரபாகரனும் உடன் சென்றுள்ளார். இந்த சமயத்தில் காதல் ஜோடிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஜயசாந்தி மற்றும் பிரபாகரன் ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. 

இதில், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வித்தியா, ஆசைப்பாண்டி, கொலையாளிகள் விஜயசாந்தி மற்றும் பிரபாகரன் ஆகிய 4 பேரை கைது செய்த ஜெயமங்கலம் காவல்துறையினர் தேனி சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Love Failure girl Murder his Love boy Police Arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal