புதுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் சென்ற வேன் தூத்துக்குடியில் சாலையில் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்; ஒரு வருக்கு தீவிர சிகிச்சை..!
19 people were injured in an accident when a van overturned in Thoothukudi
புதுக்கோட்டையில், சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்களானதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மேலமஞ்சிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். குறித்த வேனை அபிஷேக் (வயது 22) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். குறித்த வேன் இன்று அதிகாலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம், மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை அருகே சென்றுள்ளது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது வேனில் வந்த 19 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிவஞானம் (57) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
19 people were injured in an accident when a van overturned in Thoothukudi