தேனியில் பயங்கரம்! வீட்டிற்குள் கிடந்த 3 சடலங்கள்.. சிக்கிய கடிதம்! மனைவி, மகளை கொன்ற தந்தை! - Seithipunal
Seithipunal


தேனி அருகே 5 வயது மகள், கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், அமர்ச்சியாபுரத்தை சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் (35 வயது) - அஜிதா (33 வயது). இவர்களுக்கு ஐந்து வயதில் பிரிவித்கா என்ற மகளும் உள்ளார். மேலும் அஜித்தா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். 

தற்போது அரண்மனைபுதூர் பகுதியில் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசித்து வந்த சதீஷ்குமார், தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அவர் பணிக்கு செல்லாமல் மன உளைச்சலில் வீட்டிலேயே இருந்ததாக சொல்லப்படுகிறது. 

இதனை அறிந்த அஜித்தாவின் குடும்பத்தினர், குடும்பத்தோடு அவர்களின் வீட்டுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், அஜித்தாவின் தந்தை மற்றும் சகோதரர் நேரடியாக அரண்மனைபுதரில் உள்ள அஜித்தாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். 

அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள்,  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அஜித்தா மற்றும் சிறுமி பிரித்திகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் சதீஷ்குமார் தூக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, தகவல் அறிந்து வந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

இதற்கு இடையே போலீசார் நடத்திய சோதனையில், சதீஷ்குமார் எழுதிய ஒரு கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தில்,இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தான் இறக்க முடிவு செய்து, தன் மனைவி, குழந்தைகள் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், அனைவரும் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும் என்றும் சதீஷ்குமார் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni husband kill wife and daughter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->