இந்த சிட்பண்டில் சீட்டு போட்டு இருந்தீர்களா?.. சிக்கிய மோசடி கும்பல்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 40 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 7 பேருக்கு வலை வீசியுள்ளனர். 

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த உதயம் பைனான்ஸ் நிறுவனத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். 

இந்த நிலையில், பலரும் இதில் ஏலத்தில் சேர்ந்தும் பணம் செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த நிறுவனம் மூடப்பட்டு, அதன் அதிகாரிகள் தலைமறைவாகியுள்ளனர். இதனால் பணம் கட்டிய 550 பேரும், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். 

இதன் பேரில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், மொத்தமாக 40 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்து உத்தமபாளையம் பகுதியில் வசித்து வந்த தர்விஸ் அக்தர், அவரது மனைவி ரமாபாய், கருப்பசாமி ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஏழு பேரை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Chit Fund Fraud Husband wife Arrest by Police 24 Dec 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->