தங்கக்கட்டியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில்  300 கிராம் தங்கக்கட்டியுடன் ரெயிலில் தப்ப முயன்ற மராட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவனிடமிருந்த தங்கக்கட்டி மற்றும் ரூ.43 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விகாஷ் ஷிண்டே தூத்துக்குடி டபிள்யூ ஜி.சி.ரோட்டில் நகை தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்த  மாற்றுத்திறனாளியான மராட்டிய மாநிலம் எலவிக்கவ்மேடா பகுதியை சேர்ந்த 28 வயதான வாலிபர் விட்டல் சிங்கடே என்பவர் நேற்றுமுன்தினம் 298 கிராம் 400 மில்லி அளவிலான தங்கக்கட்டி, ரூ.43 ஆயிரத்தை திருடிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இதுபற்றி தூத்துக்குடி மத்திய போலீசில் விகாஷ் ஷிண்டே புகார் செய்ததன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது விட்டல் சிங்கடே, நெல்லை- தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பி சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அதனை தொடர்ந்து  இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நெல்லை- தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததும் சோதனை செய்தனர் .அப்போது அந்த ரெயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு படுத்திருந்த விட்டல் சிங்கடேவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த தங்கக்கட்டி மற்றும் ரூ.43 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் விட்டல் சிங்கடே சொந்த கிராமத்தில் பலரிடம் கடன் வாங்கி வீடுகட்டி வருவதாகவும், இதனால் அந்த கடனை அடைக்க நகை உருக்கும் கடையில் இருந்து 300 கிராம் தங்கக்கட்டி மற்றும் பணத்தை திருடி கொண்டு மும்பை ரெயிலில் தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The young man who swam with a gold chain what a shock at the end


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->