கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி.. சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்!
The work of setting up a sewage drainage system has been inaugurated by the Speaker Selvam
புதுச்சேரி மணவெளி தொகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
மணவெளி சட்டமன்றத் தொகுதி மணவெளி கிராமத்தில் உள்ள கண்ணப்ப கவுண்டர் வீதியில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் செல்வம் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் முயற்சி எடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மணவெளி பகுதியில் உள்ள கண்ணப்ப கவுண்டர் வீதியில் வடிகால்களை மறுசீரமைக்கும் பணிக்காக ரூபாய் 10.40 லட்சம் மதிப்பில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பணிகளை தொடங்க அரசாணை பெற்று தந்தார்.
அதன்படி இப்பணிகளை தொடங்கும் முகமாக காலை அந்த பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் கலந்து கொண்டு இப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு ரமேஷ் உதவி பொறியாளர் திரு நாகராஜ் இளநிலை பொறியாளர் திரு சுரேஷ் மற்றும் மணவெளி பகுதி முக்கிய பிரமுகர்கள் சுப்பிரமணி ராமஜெயம், காமராஜ் என் எஸ் கே செழியன் தனுசு சக்திவேல் சரவணன், தங்கதுரை சசி சேகர் டாக்டர் ராஜ்குமார் ராமச்சந்திரன் நரசிம்மன், அருள்ராஜ், முருகன் மற்றும் அந்த பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
English Summary
The work of setting up a sewage drainage system has been inaugurated by the Speaker Selvam