பிரிந்து சென்ற மனைவி... மனமுடைந்த கணவர் எடுத்த விபரீத முடிவு!
The wife who left The heartbroken husband made a terrible decision
கன்னியாகுமரி அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்த துரைராஜ் . இவர் குமரி பகுதியை சேர்ந்த ஜேசு சவுந்தர்யா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
முட்டைக்காடு பகுதியில் துரைராஜ் தனது குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். துரைராஜி மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதியும் வழக்கம்போல் துரைராஜ் மனைவியிடம் தகராறு ஏற்பட்டபோது மனமுடைந்த ஜேசு சவுந்தர்யா, கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு பிள்ளைகளோடு சென்றுள்ளார். இதனையடுத்து பிள்ளைகளின் பாட புத்தங்களை எடுப்பதற்காக கடந்த 15ம் தேதி ஜேசு சவுந்தர்யா கணவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் கணவர் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது துரைராஜ் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கினார் . போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
The wife who left The heartbroken husband made a terrible decision