குடி போதையில் தகராறு செய்த கணவன் கொலை... நாடகமாடிய மனைவி.!
The wife who cut her husband who was alcoholic and problematic
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மது போதையில் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜெயா இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மது போதைக்கு அடிமையான ராஜா குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மது போதையில் வந்த ராஜா தனது மனைவி ஜெயாவிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயா வீட்டிலிருந்த அரிவாளால் கணவர் ராஜாவை சரமாரியாக தலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி இருக்கிறார். இந்த பயங்கர செயலில் ரத்த வெள்ளத்திலேயே ராஜா பலியானார்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குடிபோதையில் ராஜா தன்னைத்தானே வெட்டிக் கொண்டதாக அவரது மனைவி கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் ஜெயா தனது கணவர் ராஜாவை வெற்றி படுகொலை செய்தது காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய ஜெயாவை காவல்துறை கைது செய்தது.
English Summary
The wife who cut her husband who was alcoholic and problematic