மனைவி கண் முன்னே துடி துடித்து கணவன் உயிரிழந்த சோகம்!...பிண்ணணியியில் திடுக்கிடும் தகவல்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த கலைவாணன் என்பவர், நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு மதுபோதையில் வந்ததால்,  அவரது மனைவி வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படும் நிலையில், இதன் காரணமாக அவர் வீட்டு வாசலில் படுத்து உறங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். முன்னதாக கலைவாணனின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அவரது மனைவி சவுந்தர்யா, வெளியே வந்து பார்த்த போது கலைவாணன் தலையிலிருந்து ரத்தம் கொட்டியதை அடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில், அதற்குள் மனைவியின் கண்முன்னே கலைவாணன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த கொலை சம்பவம் குறித்து பெரும்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட கலைவாணன், அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பவரின் தாயுடன் சில மாதங்களுக்கு முன்பு தகராறு செய்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த வசந்த், தனது நண்பர்களான சந்தோஷ், தமிழ், அருண் ஆகியோருடன்  கலைவாணன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள வசந்த் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட கலைவாணன் மீது 7 வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில்,  பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் உளவாளியாக கலைவாணன் செயல்பட்டு வந்த நிலையில், இதனால்  அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The tragedy of the death of the husband in front wife Shocking information


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->