75 வயது மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன்..கோவையில்  கொடூரம்! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் இருந்து மருமகன் , 75 வயது மாமியாரை  பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 51 வயதான கூலி தொழிலாளி ,தனது 22 மகனுடன் வசித்துவருகிறார்.இவர்கள் இருவருக்கும் உறுதுணையாக கூடவே தொழிலாளியின் மாமியாரான 75 வயது மூதாட்டி அவர்களுடன் வசித்து வருகிறார். அந்த மூதாட்டி தனது மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் மருமகன் மற்றும் பேரனுக்கு சமைத்து கொடுத்து நன்றாக கவனித்து வந்தார்.

இந்தநிலையில்  மதுகுடிக்கும் பழக்கம் உள்ள  கூலிதொழிலாளி நேற்று முன்தினம் இரவில் குடிபோதையில் வந்த அவர் தனது அறைக்கு தூங்க சென்றுவிட்டார். அப்போது 75 வயது மூதாட்டியும் தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

திடீரென நேற்று அதிகாலை 2 மணியளவில் மூதாட்டி பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டபோது  எழுந்த மூதாட்டியின் பேரன் அங்கு சென்று பார்த்தபோது மதுபோதையில் இருந்து தனது தந்தை, பாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கினார். உடனடியாக  சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தொழிலாளியை மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து வந்த கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி பாலியல் விவகாரம் என்பதால் இதுகுறித்து கோவை மாநகர மத்திய மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The son-in-law attempted to rape a 75-year-old mother-in-law a horrific incident in Coimbatore


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->