முறையாக சாலை வசதி இல்லை.. கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்..! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்ணை டோலிகட்டி 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்த சென்றனர்.

வேலூர் மாவட்டம்.  அணைக்கட்டு பகுதியில் உள்ள மலைகிராமங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் அங்கு வசித்து வரும் மலைகிராம மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாவட்டம் சடையன் கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித் . இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவி இருக்கிறார். அனிதா கர்பமாக இருந்த நிலையில் அவருக்கு நேற்று காலை பிரசவவலி ஏற்படுள்ளது.

அங்கு சாலை சரியாக இல்லாத நிலையில் தற்போது மழையும் சேர்ந்து கொண்டதால் இரு சக்கர வாகனத்தை கூட இயக்க முடியாத நிலையில் டோலி கட்டி தூக்கி சென்றனர்.

தகவல் அறிந்ததும் அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். மலையடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை அடுத்து, அவருக்கு அவர்கள் ஊசூர் மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சரியான சாலைவசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் சிரமபடுவதால் முறையான சாலை வசதி செய்து தரவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The pregnant women were carried away by Dolly


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->