ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டிய ‘மங்காத்தா’ – கில்லி ரெக்கார்டை சல்லி சல்லியாக நொறுக்கிடுச்சே! இத்தனை கோடி வசூலா? - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்த மங்காத்தா திரைப்படம் 2011ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. அஜித்தின் 50வது படமாக வெளியான இந்த படம், அவரது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத மைல்கல்லாக அமைந்தது. தற்போது இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே அதிரடி வசூலை பதிவு செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பில்லா படத்திற்குப் பிறகு ஏகன், அசல் போன்ற படங்களின் தோல்வியால் அஜித் ரசிகர்கள் மனச்சோர்வில் இருந்த காலகட்டத்தில், மங்காத்தா அறிவிப்பு வெளியானது. வெங்கட் பிரபு இயக்கம் என்றதும் சில ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தாலும், படம் வெளியான பிறகு அந்த சந்தேகங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, விறுவிறுப்பான திரைக்கதை, அஜித்தின் நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரம், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் என அனைத்தும் சேர்ந்து ரசிகர்களை திருப்திப்படுத்தின.

இந்த நிலையில், ரீ-ரிலீஸாக நேற்று திரையரங்குகளில் வெளியான மங்காத்தா படத்தை ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடினர். டிக்கெட் புக்கிங் தொடங்கியதிலிருந்தே ஹவுஸ்ஃபுல் காட்சிகள் அமைந்த நிலையில், தியேட்டர்களில் விசில், கைதட்டல், டயலாக் சத்தம் என ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் இருந்தது. பல ஆண்டுகள் கழித்தும் படம் சலிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், அஜித் – வெங்கட் பிரபு கூட்டணி இன்றும் வியக்க வைக்கிறது என்றும் ரசிகர்கள் பாராட்டினர்.

பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, ரீ-ரிலீஸின் முதல் நாளில் மட்டும் தமிழ்நாட்டில் மங்காத்தா ரூ.4.65 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் மொத்த வசூல் ரூ.5 கோடியை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த விஜய்யின் கில்லி (ரூ.4.23 கோடி) படத்தின் சாதனையையும் மங்காத்தா முறியடித்துள்ளது.

இந்த சாதனையால் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். “ரீ-ரிலீஸிலும் ராஜா” என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மங்காத்தா அஜித்தின் மாஸ் இமேஜ் காலம் கடந்தும் குறையவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mankatha which was a massive hit even in its re release smashed the box office record Did it earn so many crores


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->