டெக் உலகில் பூகம்பம்: AI தாக்கமா...? அமேசான் நிறுவனத்தில் 16,000 ஊழியர்கள் நீக்கம்...! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் வணிக நிறுவனங்களில் ஒன்றாக திகழும் அமெரிக்கா தலைமையிடமான அமேசான், தற்போது கடும் செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான பரவல் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமேசானும் இந்த அலைக்கு விதிவிலக்கல்ல.

கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கிடையே மட்டும், பல்வேறு மறுசீரமைப்பு காரணங்களை முன்வைத்து சுமார் 27,000 ஊழியர்களை அமேசான் பணியிலிருந்து விலக்கியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2025 அக்டோபர் 14-ஆம் தேதி மேலும் 14,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டதாக அறிவித்து தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நிறுவனத்தின் 30 ஆண்டுகால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு அமேசான் தயாராகியுள்ளது. மொத்தம் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ள அந்நிறுவனம், வரும் 27-ஆம் தேதி முதல் கட்டமாக 14,000 முதல் 16,000 வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையால் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), ரீடைல், பிரைம் வீடியோ, மனிதவள மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது. உலகின் தொழில்நுட்ப துறையில் இது புதிய அதிர்ச்சி அலை ஒன்றை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake tech world Is it impact AI 16000 employees laid off at Amazon


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->