புதிய திட்ட பணிகளை துவக்கிவைத்த எதிர்க்கட்சித் தலைவர்!
The opposition leader has initiated new project works
வில்லியனூர் சிவகணபதி நகரில் ரூ. 10 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி சிவகணபதி நகருக்கு உட்பட்ட ராகவேந்திரா நகரில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ. 9 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வேதாசலம், சதாசிவம், சம்மங்கி, சசிகுமார், ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ, குமார், ராவ், ராஜேந்திரன், விஸ்வநாதன், காசிநாதன், சக்திவேல், முருகையன், சங்கர், வெங்கட், அந்துவான், புஷ்பராஜ் மற்றும் திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, ஆதிதிராவிட அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளைக் கழக நிர்வாகிகள் சபரிநாதன், ராஜி, மிலிட்டரி முருகன், சேகர், கலைமணி, சரவணன், முருகேசன், பாலமுருகன், ராஜேந்திரன், பாலு, பாலகுரு, கமால்பாஷா, ராமஜெயம், சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மணவெளி சட்டமன்ற தொகுதி டி என் பாளையம் பகுதியில் 3 நபர்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று 17.07.2025 வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் மனோகரன் சுகாதியா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
English Summary
The opposition leader has initiated new project works