மாற்றம் ஒன்றே மாறாதது..PSNA பொறியியல் கல்லூரியில் நடந்த அறிமுக நிகழ்ச்சி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ/பி.டெக்.மாணவர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சென்னை மற்றும் அறக்கட்டளையின் (mattram Foundation)நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்.சுஜித் குமார் அவரது "மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற சிந்தனை மிக்க உரையாடல் முதல் அமர்வுடன் தொடங்கியது. இரண்டாவது அமர்வில் My Harvest Farmsன் நிறுவனர்.அரச்சனா ஸ்டாலின் "ஒரு தொழில் முனைவோராக எனது வெற்றி கதை" என்ற தலைப்பில் தனது அசாதாரண பயணத்தை பகிர்ந்து கொண்டார்.இதில் அவர் பொறியியலாராக இருந்து சமூக தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகளாக மாறிய தனது மாற்றத்தை கோடிட்டு காட்டினார்.

மூன்றாவது அமர்வு திறமை கண்டறிதல் போட்டி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.PSNA கல்லூரியின் புதிய மாணவர்களுக்கான இந்த திறமை கண்டறிதல் போட்டி, ஒவ்வொரு புதிய மாணவர்களுக்கும் தங்கள் படைப்பாற்றலை ஒளிரச் செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The only thing that doesnt change is change itself An introductory event held at PSNA College of Engineering


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->