தனது தொகுதிக்கு புதிய மின்மாற்றி...நேரு MLA தொடங்கி வைத்தார்!
The new transformer for his constituency was inaugurated by MLA Nehru
உருளையன்பேட்டை தொகுதி மோந்ரேஸ் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகரப் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் உள்ளது என்றும் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுகிறது என்றும் நகரப் பகுதியில் வாழும் மக்கள் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மேற்கண்ட பகுதிக்கு புதிய மின்மாற்றி வேண்டுமென்று மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில் இந்த கோரிக்கையை ஏற்று மோந்ரேஸ் வீதியில் சித்தி விநாயகர் திருக்கோவில் அருகில் புதுச்சேரி அரசு மின்துறை மூலம் புதிய மின்மாற்றி ( சித்தி விநாயகர் SS) 11-KV. 630.kve.. திறன் கொண்ட புதிய மின்மாற்றி ரூபாய் 45 லட்சத்தி 52 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிணை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவதற்காக...09.06.2025... திங்கள்கிழமை காலை 10:30 மணி அளவில் மேற்கண்ட பகுதியில் புதிய மின்மாற்றியை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத்தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் மக்கள் பயன்பாட்டில் கொண்டு வந்தார்.... மேலும் இந்த புதிய மின்மாற்றி மூலம்மோந்ரேஸ் வீதி,லபோர்த்து வீதி, சவரிராயுலு வீதி, கந்தப்ப முதலியார் வீதி,சின்னசுப்பிராயபிள்ளைவீதி,பாரதிவீதி, சின்ன வாய்க்கால் வீதி போன்ற வீதிகளில்குறைந்தமின்னழுத்தத்தைபோக்கும்விதமாகமேற்கண்டபகுதிமக்களின்நிலைஅறிந்துஇந்ததிட்டம்கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் திரு.முத்தானந்தம்,இளநிலை பொறியாளர் திரு.சுரேஷ் மற்றும்மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் மேலும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும், நிர்வாகிகளும் பலர் உடன் இருந்தனர்..
English Summary
The new transformer for his constituency was inaugurated by MLA Nehru