மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் நமச்சிவாயம்.! - Seithipunal
Seithipunal


திருக்கனூர் இல்லத்தில் மண்ணாடிப்பட்டு தொகுதி மக்களை  நேரில் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் வாழ்வில் ஏற்படும் குறைகள் மற்றும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பில், குடிநீர் விநியோகம், சாலை பழுது, வீதி ஒளி வசதி, கழிவுநீர் வடிகால், வருவாய் வாரிய சம்பந்தப்பட்ட விவகாரங்கள், இலவச வீட்டு மனை கோரிக்கைகள், சத்துணவு மையம், பள்ளி வசதிகள் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரச்சனையையும் கவனமாக கேட்ட அமைச்சர், உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அதிகாரிகளை அழைத்து தொலைபேசியில் பேசினார்.

சில முக்கியமான பிரச்சனைகளுக்கு அதே நேரத்தில் தீர்வு காண்பதற்கான உத்தரவுகளை இடைநிறுத்தாமல் வழங்கினார். பிற கோரிக்கைகள் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் அதிகாரிகளுக்கு நேரடி பணி கட்டளைகள் வழங்கப்பட்டது .

அரசாங்கத்தினுடைய மக்கள் நலப்பணிகளில் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் இந்த வகையான சந்திப்பு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் பிரச்சனைகளில் விரைவான தீர்வுகளை காண்பது தான் தனது கடமை என்றும், மக்களின் நலனே அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை என்வும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The minister Namassivayam took immediate action after hearing the peoples grievances in person


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->