குடியாத்தம் பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும்.. விவசாய சங்கம் கோரிக்கை!
The livestock market should be reopened in the Kudiyatham area Farmers association demands
குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் நலன் கருதி மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும் என ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கைவிடுத்தனர்.
ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சியில் உயர்திரு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை மனு வழங்கினர் !!
இன்று வேலூர் மாவட்டம்-குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில்வருவாய்.. தீர்ப்பாயம்..( ஜமாபந்தி) தொடக்கநிகழ்வு -உயர்திரு வேலூர் மாவட்ட ஆட்சியர்-- சுப்புலட்சுமி - அவர்களிடம். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வேலூர்/ திருப்பத்தூர் -மாவட்ட செயலாளர் தோழர்-k. சாமிநாதன் அவர்கள்.. கீழ்காணும் கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலாத்தளம் ஆக்க வேண்டும்.. குழந்தைகள் பூங்கா துவங்க வேண்டும். அணை தண்ணீர் வழிந்து வருகிற. போது ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும்.... குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் நலன் கருதி மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும் .

விபத்துக்களை தடுக்கும் வகையில் குடியாத்தம் மற்றும் உள்ளி ரயில்வே மேம்பாலத்தின் மீது. மின் விளக்குகள் பொருத்த வேண்டும்... நலிவடைந்தவர்களுக்கு தையல் இயந்திரம் -OAP-( ஓஎபி) - வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கோரிக்கைகள் மனுவாக வழங்கி பேசப்பட்டது.தமிழ்நாடு விவசாய சங்கம் -aiks. வேலூர் -திருப்பத்தூர் மாவட்ட குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
English Summary
The livestock market should be reopened in the Kudiyatham area Farmers association demands