பள்ளி சிறுமியை கடத்தி சென்ற ஜிம் மாஸ்டர் .. 8 மாத கைகுழந்தையுடன் மீட்ட காவல்துறை..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஜிம் மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம்  கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். ஜிம் ட்ரைனரான இவர் முகநூல் மூலம் தருமபுரி பகுதியை  சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த கடந்த 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 தர்மபுரிக்கு வந்த அவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

மகளை காணததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொணடனர். ஆனால், விசாரணை மந்தமாக நடைபெற்றதால் சென்னை ஐகோர்ட்டில்  ஆட்கொ ணர்வு மனு தாக்கல் செய்தனர்.  

இதனை அடுத்து தனிப்படை அமைத்த காவல்துறையினர் நரசிம்மனின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடி வந்தனர். இதனிடையே அவர் தெலுங்கானாவில் இருப்பதாக தகவல் கிடைக்கவே விரைந்து சென்ற காவல்துறையினர் நரசிம்மனை மடக்கி பிடித்தனர்.

அவருடன் இருந்த மாணவியை மீட்டனர். அப்போது மாணவியின் கைகளில் 8 மாத ஆண் குழந்தை  அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியுடன் குடும்பம் நடத்தியதில் அவருக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நரசிம்மனுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமானது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The gym master who kidnapped the school girl


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal