அறுந்து கிடந்த மின்வேலியை மிதித்த சிறுமி உயிரிழப்பு., காஞ்சிபுரத்தில் நடந்த சோகம்...!! - Seithipunal
Seithipunal


அறுந்து கிடந்த மின்வெளியை மிதித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பட்டு முதலியார் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் பலராமன் . இவருக்கு திருமணமாகி விமலா என்ற மனைவியும்  ஸ்ரீமதி(8) என்ற மகளும் இருக்கிறார்.

நேற்றிரவு பெய்த கனமழையால் பலராமனின் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்திருந்ததுள்ளது. இதனை அறியாத சிறுமி தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பியை சிறுமி மிதித்துள்ளார்.இதனால், மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்தார். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl who stepped on the electric fence died


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal