‘கிளுகிளு’ப்பாக பேசியதில் மயங்கிய முதியவர்.. ரூ.9 கோடியை அபேஸ் செய்த அழகிகள்!
The elderly man who was mesmerized by the conversation in a hirpy manner the beauties who made 9 crores
வலைத்தளத்தில் கிளுகிளு’ப்பாக பேசியதில் மயங்கிய முதியவர் ஒருவர் பல அழகிகளுக்கு ஆன்லைன் மூலமே சுமார் ரூ.9 கோடியை அனுப்பி வைத்துள்ளார்.
மும்பையை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வங்கிக்கணக்கில் ரூ.9 கோடி ரூபாய் இருந்துள்ளது.தன்னுடைய மகன் வெளிநாட்டில் மனைவியுடன் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் முதியவர் மகனை தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளார்.தனது தந்தை வங்கிக்கணக்கில் ரூ.9 கோடி ரூபாய் இருந்தநிலையில் தன்னிடம் ஏன் பணம் கேட்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டு மகன் தந்தையின் வங்கிக்கணக்கு விவரங்களை ஆய்வு செய்தார்.
அப்போது தந்தை ரூ.8.75 கோடிக்கு மேல் பணத்தை பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது . இதையடுத்து தந்தையிடம் கேட்ட போது, தன்னிடம் 4 பெண்கள் பணத்தை பறித்துகொண்டதாக கூறினார். உடனடியாக இது குறித்து மகன், மும்பை சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகநூலில் முதியவர் சார்வி என்ற பெண்ணுக்கு நட்பு கோரிக்கை வைத்தார். முதியவரின் நட்பு கோரிக்கையை ஏற்ற சார்வி தான் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக முதியவரிடம் கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண் முதியவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய முதியவர் அவருக்கு லட்சம், லட்சமாக பணத்தை அனுப்பி உள்ளார். திடீரென சார்வி முதியவரிடம் பேசுவதை நிறுத்தினார்.
அதன்பிறகு சார்வியின் தோழி என கூறி முதியவருடன் கவிதா என்ற பெண் பேசத்தொடங்கினார். அவரும் பணம் பறித்து உள்ளார்.அதன்பிறகு சார்வியின் தங்கை என கூறி தினாஸ் என்ற பெயரில் பெண் ஒருவர் முதியவரிடம் பேசினார். அவரும் திருமணம் செய்வதாக கூறி முதியவரிடம் மீண்டும், மீண்டும் பணத்தை கறந்தது தெரியவந்தது.
இதன் பின்னர் ஜாஸ்மின் என்ற பெயரில் இன்னொரு பெண் முதியவரிடம் பணத்தை கறந்தார்.ஆனால் முதியவர் எந்த பெண்ணையும் நேரில் பார்க்கவில்லை.வலைத்தளத்தில் பழகிய அவர்களிடம் ஆன்லைன் மூலமே சுமார் ரூ.9 கோடியை அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதியவரிடம் பணத்தை கறந்தது வெவ்வேறு பெண்களா? அல்லது ஒரே பெண் தான் வெவ்வேறு பெயர்களில் இந்த மோசடியில் ஈடுபட்டாரா?, இதன் பின்னணியில் கும்பல் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
The elderly man who was mesmerized by the conversation in a hirpy manner the beauties who made 9 crores