அரசு பள்ளிகளில் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட அறிவிப்பாணை ரத்து ; 'மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும்'என நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளிகளில் 09-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் வரையான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதாவது, மாணவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா..? அவர்களின் பெற்றோர் சிறையில் உள்ளனரா..? அவர்கள் அகதிகள் உள்ளிட்ட பின்புல தகவல்களை சேகரிக்குமாறு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமீர் ஆலம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜனவரி 05) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் அறிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதில், விசாரணையின் போது மாதிரி பள்ளி என்று கூறி ஏன் இந்த தகவல்களை கேட்கிறீர்கள்..? இதை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்..? என்று நீதிமன்றம் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, 'மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவே இந்த நடவடிக்கை' என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த தகவல்ககள் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்றும், மாணவர்களின் தகவல்கள் அனைத்தும் உணர்வு பூர்வமானவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன், அரசு பள்ளிகளில் கேட்பது போல், தனியார் பள்ளிகளில் கேட்டுள்ளீர்களா..? இப்படி தகவல்களை சேகரிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வை உருவாக்கும் என்று கூறி அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The court has quashed the government order that mandated the collection of background information of students in government schools


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->