கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணி..அடிக்கல் நாட்டி திமுக–வினர் உற்சாகம்!
The construction work of the Kalaignar Arivalayam DMK members are enthusiastic as the foundation is laid
புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணியை திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா இன்று திமுக–கழகத்தினர் முன்னிலையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அருகில் உள்ள சொந்தமாக உள்ள இடத்தில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாநில கழகம் சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு, புதுச்சேரி நகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி கோரப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை 7.21 மணி முதல் 7.59 மணிக்குள் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, மாநில கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.பி. திருநாவுக்கரசு, துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலாசுப்பேட்டை தொகுதி செயலாளர் கோ. தியாகராஜன் வரவேற்று பேசினார்.
மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி, அறிவாலயம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் பாராளுமன்ற செயலர் பூ. மூர்த்தி, கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், பா. செ. சக்திவேல், ந. தங்கவேலு, பெ. வேலவன், வீ. சண்முகம், எஸ். தர்மராஜன், ஆர். கோகுல், ஆர். ரவீந்திரன், டி. செந்தில்வேலன், கே.பி. இளம்பரிதி, பெ. பழநி, மு. பிரபாகரன், எஸ். எஸ். செந்தில்குமார், வே. மாறன், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதா குமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீதாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், பி.ஆர். ரவிச்சந்திரன், வெ. சக்திவேல், க. ராஜாராமன், செல்வ. பார்த்திபன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், செ. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், விவசாய அணி வெ. குலசேகரன், வர்த்தகர் அணி சு. ரமணன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், விவசாய தொழிலாளர் அணி ப. தவ முருகன், தொழிலாளர் அணி, கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், பொறியாளர் அணி ஆ. அருண்குமார், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முஹம்மது ஹாலித், மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், சுற்றுச்சூழல் அணி த. முகிலன், அயலக அணி அ. ஷாஜகான், மகளிர் தொண்டர் அணி சுமதி மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
English Summary
The construction work of the Kalaignar Arivalayam DMK members are enthusiastic as the foundation is laid