முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி..தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை 2025-
க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தேனி
பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்றஉறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் இன்றுதுவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின்
விளையாட்டு தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி,கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுபணியாளர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பைவிளையாட்டுப் போட்டிகள் 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது.இவ்வாண்டு வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு 5 பிரிவுகளில்மாவட்ட அளவில் 25 விளையாட்டுப் போட்டிகள், மண்டல அளவில்விளையாட்டுப்போட்டிகள் மற்றும் மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள்நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 42,715 நபர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்தஆண்டைவிட 26,557 நபர்கள் கூடுதலாக பதிவு செய்துள்ளார்கள்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட
அளவிலான தடகளம், சிலம்பம், கைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபடி, கோ-
கோ, கூடைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், ஓட்டப்பந்தயம், செஸ், கேரம்,
கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இன்று (26.08.2025) முதல்
10.09.2025 வரை தேனி மாவட்ட விளையாட்டு மைதானம்
மற்றும் ஆயுதப்படை காவல் மைதானத்தில் (கிரிக்கெட், கூடைப்பந்து)
நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை
தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றிபெற மாணவர்களுக்கு வாழ்த்துகளை
தெரிவித்தார்.

மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை
விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில்
நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி
பெறுபவர்களுக்கு (தனிநபர் மற்றும் குழுப்போட்டிகள்) முதல் பரிசாக தலா ரூ.3000/-,
இரண்டாம் பரிசாக தலா ரூ.2000/-, மூன்றாம் பரிசாக தலா ரூ.1000/- வழங்கப்படும்.
மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக
ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/- மூன்றாம் பரிசாக ரூ.50,000/- மற்றும்
குழுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.75,000/-, இரண்டாம்
பரிசாக ரூ.50,000/- மூன்றாம் பரிசாக ரூ.25,000/- வழங்கப்படும். மாநில அளவில்
வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் கோப்பை
வழங்கப்படும்.

மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி
மாணவர்கள் Bonafide Certificate அல்லது School/College ID card, மாற்றுத்திறனாளிகள்
எனில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (ID card), பொதுப் பிரிவில் கலந்து
கொள்ள உள்ள வீரர் வீராங்கனைகள் இருப்பிடச் சான்றிதழ், அரசு ஊழியர்கள்
தங்களுக்கான அலுவலக அடையாள அட்டை (Department ID card), மேலும்
போட்டிகளில் பங்கேற்க உள்ள அனைவரும் தங்களின் ஆதார் கார்டு மற்றும் வங்கி
கணக்கு புத்தக நகலினை கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும். மேலும், கூடுதல்
தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04546-253090
அல்லது 74017 03505 என்ற தொலைப்பேசி எண்ணிலோ (வேலை நேரங்களில்)
தொடர்பு கொள்ளலாம்.

முன்னதாக, மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2025-இன்
மகிமைக்காகவும் எங்கள் மாவட்டத்தின் பெருமைக்காகவும், விளையாட்டு விதிகளுக்குகட்டுப்பட்டு, இவ்விளையாட்டுப் போட்டிகளில் நேர்மையாக பங்கெடுத்துக்கொள்கிறோம் என்றும் மனம், மெய், மொழிகளால் ஒரு மனதுடன் உறுதிகூறுகின்றோம் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தலைமையில் விளையாட்டு வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் திரு.ரேணுபிரியா
பாலமுருகன், துணைத்தலைவர் திரு.செல்வம், திட்டக்குழு உறுப்பினர் திரு.நாராயணபாண்டியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவக்குமார் மற்றும் விளையாட்டுஆசிரியர்கள், விளையாட்டு நடுவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Ministers trophy sports competition inaugurated by the district collector


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->