மகளுக்கு நடந்த கசப்பான அனுபவம்...’பகிர்ந்து கொண்ட  நடிகர் அக்‌ஷய் குமார்! - Seithipunal
Seithipunal


சைபர் விழிப்புணர்வு தொடா்பான நிகழ்ச்சியில் ‘ஆன்லைனில் தனது  மகளுக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் நேற்று சைபர் விழிப்புணர்வு தொடா்பான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  நடிகர் அக்சய் குமார் கூறியதாவது;-“எனது மகள் ஆன்லைனில் வீடியோ கேம்  மூலம் ஒருவர் எனது மகளிடம் பேசி உள்ளார் ஆரம்பத்தில் மிகவும் இயல்பாக அந்த நபர் பேசி உள்ளார்.

ஒரு நாள் அந்த நபர், எனது மகளிடம் `நீ ஆணா, பெண்ணா?' என கேட்டு இருக்கிறார். எனது மகள் அவரிடம் நான் பெண் என கூறியுள்ளார். அதன்பிறகு ஒருநாள் அந்த நபர், என் மகளிடம் நிர்வாண படம் அனுப்புமாறு கேட்டு இருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எனது மகள் உடனடியாக செல்போனை அணைத்துவிட்டு நடந்ததை எனது மனைவியிடம் கூறியிருக்கிறாள்.

இப்படி தான் எல்லாம் தொடங்குகிறது.எனது மகளுக் கு நடந்தது சைபர்குற்றத்தின் ஒரு பகுதி தான். சில சம்பவங்களில் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். 

எனவே சைபர் பாதுகாப்பு குறித்து நமது குழந்தைகள் படிக்க வேண்டும். மராட்டியத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து 7 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு பாடவேளை கற்றுக்கொடுக்க வேண்டும் . தெருவில் நடக்கும் குற்றங்களை விட சைபர் குற்றங்கள் மிகப்பெரியது. அதை நாம் தடுக்க வேண்டும்.”இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The bitter experience her daughter went through Actor Akshay Kumar shared


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->