10- நாட்கள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.. முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்!
The assembly should be convened for 10 days Former Chief Minister insists
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மின்துறை தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம் என்று காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது :10- நாட்கள் சட்டமன்றத்தை நடத்த வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
மேலும் காரைக்கால் மக்கள் குறித்து ஆளும் அரசு கவலைப்படுவதில்லை.சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை ஆட்சியாளர்கள் தெரிவிக்கவில்லை.

கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் முதலமைச்சர் 4-முறை மட்டுமே காரைக்கால் பகுதிக்கு வந்துள்ளார்.வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்காலில் 5-தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை குறைந்த பட்சம் 10-நாட்களாவது நடத்த வேண்டும்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மின்துறை தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம் - காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியில் கூறினார்.
English Summary
The assembly should be convened for 10 days Former Chief Minister insists