தீயணைப்புத்துறை பதவிகளுக்கான பணி ஆணை..முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்! - Seithipunal
Seithipunal


தீயணைப்பு வாகன ஓட்டுநர் பதவிகளுக்கான பணியாணைகளை இன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கினார்.

புதுச்சேரி தீயணைப்புத்துறையில் கடந்த மே மாதம் 29.05.2025  அன்று நேரடித்தேர்வு ஆட்சேர்ப்பு மூலமாக 4 (ஆண் 2, பெண்-2) நிலைய அதிகாரிகளுக்கான பணியாணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்துறையில் மேலும் காலியாக உள்ள 58 தீயணைப்பு வீரர்கள் (ஆண்-39, பெண் -19) மற்றும் 12 தீயணைப்பு வாகன ஓட்டுநர்களுக்கான பதவிகளில், நேரடித்தேர்வு ஆட்சேர்ப்பு மூலமாக நிரப்ப எடுக்கப்பட்ட உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான பணிகள் முடிவடைந்தது .

இந்த நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றுள்ள 49 தீயணைப்பு வீரர்கள் (ஆண் - 32, பெண் - 17) மற்றும் 10 தீயணைப்பு வாகன ஓட்டுநர் பதவிகளுக்கான பணியாணைகளை இன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The appointment order for the fire department positions was given by Chief Minister Rangasamy


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->