நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நாளை தொடக்கம்!
The Adipura festival at the Nellaiyappar temple starts tomorrow
ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா நெல்லையப்பர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழாநாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.அதனை தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

4-ம் திருவிழாவான 21-ந்தேதி மதியம் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு காந்திமதி அம்மன் திருவீதி உலா , 10-ம் திருநாளான வருகிற 27-ந்தேதி மாலை கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடைபெறஉள்ளது.
அப்போது காந்திமதி அம்மனை கர்ப்பிணி பெண் போல் அலங்கரித்து மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து,அனைத்து பலகாரங்களும் படைக்கப்படும். தொடர்ந்து சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.
அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சிறுபயிரை குழந்தை இல்லாத பெண்கள் வாங்கி சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
English Summary
The Adipura festival at the Nellaiyappar temple starts tomorrow