பேரறிஞர் அண்ணாவின் 117–வது பிறந்த நாள் விழா..தொண்டர்களுக்கு திமுக அழைப்பு!
The 117th birth anniversary celebration of the great scholar AnnaDMK invitation to the supporters
பேரறிஞர் அண்ணாவின் 117–வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பிதழ் புதுச்சேரி மாநில தி.மு.கழகம்.அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ.,அனுப்பியுள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் – ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிப் பெருமைப்படுத்திய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 15 திங்கள்கிழமை அன்று புதுச்சேரி மாநில தி.மு.கழகம் சார்பில், காலை 9.00 மணியளவில் சுதேசி மில் அருகில் நாம் அனைவரும் வழக்கம்போல் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட உள்ளது.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – கழக முப்பெரும் விழா !பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147–வது பிறந்த நாளை முன்னிட்டு, செப்டம்பர்–17 புதன்கிழமை அன்று புதுச்சேரி மாநில தி.மு.கழகம் சார்பில், காமராஜர் சாலையில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக முப்பெரும் விழாவிற்கு கரூர் செல்ல இருப்பதால், காலை 07.00 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
தொடர்ந்து, அன்று மாலை 5.00 மணியளவில் நமது கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதியார் அவர்கள் தலைமையில் கரூரில் கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
ஆகவே, பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது பிறந்த நாள் விழா மற்றும் கழக முப்பெரும் விழா ஆகியவற்றில் நமது மாநில கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என்றும் கழகப் பணியில்,இரா. சிவா எம்.எல்.ஏ.,அமைப்பாளர்,புதுச்சேரி மாநில தி.மு.கழகம் என அனுப்பியுள்ளார்.
English Summary
The 117th birth anniversary celebration of the great scholar AnnaDMK invitation to the supporters