அந்த கட்சியை தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
That party is swallowing the DMK Edappadi Palaniswami is furious
கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி' மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.தினமும் அவர் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று செய்து வருகிறார்.
அதன்படி எடப்பாடி பழனிசாமி நேற்று தென்காசிக்கு வந்த அவர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:,தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது. கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார்கள். அந்த பயத்தில்தான் மவுனம் காக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது'
புதுப்புது பெயர் வைத்து, அதோடு திட்டத்தை கைவிடும் கட்சி தி.மு.க. தான். "தி.மு.க. ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. உங்களுடன் ஸ்டாலின் என்று அரசு அதிகாரிகள் வீடுவீடாக வருகிறார்கள்.
46 பிரச்சினைகள் இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இத்தனை ஆண்டுகளாக தீர்த்துவைக்கவில்லை. மோசடி என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் மோசடி. ஆகவே மக்கள் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு ஏகோபித்த அளவுக்கு இருக்கிறது. தி.மு.க.வின் உருட்டுகளும், திருட்டுகளும் இனி எடுபடாது.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார் , "
English Summary
That party is swallowing the DMK Edappadi Palaniswami is furious