#மயிலாடுதுறை || கள்ளக்காதலனுடன் தலைமறைவாகிய இளம்பெண் மீண்டும் மாயம்.!
tharankampadi young lady again missing
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்களாச்சேரியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). இவரது மனைவி சுந்தரி (வயது 26). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சுந்தரி கடந்த 7-ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து விசாரித்தபோது சுந்தரி அவரது சொந்த ஊரை சேர்ந்த அய்யப்பனுடன் சென்று விட்டதாக தெரிய வந்தது.

இதையடுத்து சுந்தரியின் தாய் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர்.
மேற்கொண்டு இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கடந்த 11-ம் தேதி சுந்தரி மீண்டும் மாயமானார்.

இதுகுறித்து, வினோத்குமார் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
tharankampadi young lady again missing