விடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள்..முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதல்வர்" தொடங்கிவைக்கப்பட்ட, "தாயுமானவர்" திட்டத்தின்படி தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்களின் விடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் தாயுமானவர்' திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அதன்படி நேற்று   தாயுமானவர் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுசென்னை தண்டையார் பேட்டை கோபால் நகரில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட , மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.இதற்காக  அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும். 

இந்தநிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்" தொடங்கிவைக்கப்பட்ட, "தாயுமானவர்" திட்டத்தின்படி தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்களின் விடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது. 

முதல்வர் அறிவித்தபடி தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள தெருக்களில் பயனாளிகளின் வீடுகளுக்கு ரேசன்கடை ஊழியர் செல்லத்துரை நேரிடையாக ரேசன் பொருட்களை கொண்டு சென்று விநியோகித்தார்.இவ்வாறு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம்வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிக்கும் மிகப்பெரிய பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thank you to the Chief Minister from the differently abled people who went to the locations for ration supplies


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->