அந்த அன்பு தான் சார் எங்க விவசாயியோட சொத்து.. குருவிக்கூட்டிற்காக விவசாயி செய்த நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


வயலில் குருவி கட்டிய கூட்டை கலைக்க மனமில்லாமல், அந்தப் பகுதியை விட்டுவிட்டு பிற பகுதிகளை அறுவடை செய்த விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மின்விளக்கு இணைப்பு பெட்டியில் குருவி கூடு கட்டி முட்டையிட்டு அடை காத்து வந்த நிலையில், தெரு விளக்குகள் எரிய வைக்கும் மொத்த அமைப்பில் குருவி கூடுகட்டி இருந்ததால், ஒட்டுமொத்த கிராமமும் 30 நாட்களாக இருளில் மூழ்கி இருந்தது.

தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரங்கநாதன். இவர் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். 

நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களை அறுவடை செய்ய, அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இருந்தது. இதன்போது அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை இணைத்தபடி குருவி ஒன்று கூடுகட்டி இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, குருவிக் கூட்டை கலைக்க விரும்பாத ரங்கநாதன், பிற இடங்களில் உள்ள பயிர்களை அறுவடை செய்து, குருவி கூடு கீழே விழுந்து விழாமல் இருக்கும் வண்ணம் தடுப்பு அமைத்து பாதுகாத்துள்ளர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Farmer Save Cuckoo Nest in Farmer Agriculture land


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->