சென்னையில் தண்டையார்பேட்டை-அண்ணாநகர் தூய்மை சேவை மாற்றம்! பழைய ஒப்பந்தம் ரத்து செய்து மாநகராட்சி புதிய திட்டத்துக்கு பச்சைக்கொடி...!
Thandaiyarpet Annanagar cleaning service change Chennai Old contract cancelled and corporation gives green signal to new project
சென்னை மாநகராட்சி வெளியிட்ட புத்தம் புதிய செய்திக்குறிப்பில் கூறியிருப்பதே இதுதான், மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில் தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள உலகளாவிய தரத்தில் ஒப்பந்தம் கோரப்பட்டது.
கடந்த மாதம் 28-ந்தேதி வரை மொத்தம் 4 நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த மனுக்கள் பெறப்பட்டிருந்தன.இரண்டு மண்டலங்களுமே மக்கள் நெரிசல் அதிகமானவை; குறுகிய தெருக்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், உயரமான குடியிருப்புகள், மயானங்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட சவாலான சூழல் கொண்டவை.

இதனால், இங்கு மேற்கொள்ளப்படும் துப்புரவு மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்வது உயர் தரமான தொழில்நுட்பத்துடனும் அதிக நுணுக்கத்துடனும் அமைய வேண்டும்.ஆனால், முன்னதாக உருவாக்கப்பட்டிருந்த டெண்டர் ஆவணங்கள் தற்போதைய சேவை தேவைகளுக்கு பொருந்தவில்லை என்பது மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
பூங்கா பராமரிப்பு, விளையாட்டு அரங்குகள் பராமரிப்பு போன்ற முக்கிய சேவைகளையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதன் மூலம் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையின் தரம் மேலும் மேம்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் எதிர்பார்க்கும் தரத்துக்கு ஏற்ப புதிய விதிமுறைகளுடன் திருத்தப்பட்ட டெண்டரை வெளியிடுவது மிகவும் முக்கியமானதாக இருப்பதால், தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் மண்டலங்களுக்கு முன்பு கோரப்பட்டிருந்த ஒப்பந்தம் இப்போது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thandaiyarpet Annanagar cleaning service change Chennai Old contract cancelled and corporation gives green signal to new project