ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ குறித்து ரன்வீர் சிங்க் பேச்சு துளுமொழி மக்களை அதிரவைத்தது...!
Ranveer Singhs speech Rishabh Shettys Kandhara shocked Tulu people
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா சாப்டர்-1’ படம் கர்நாடக கடலோர மாவட்டங்களில் துளுமொழி பேசும் மக்களின் தெய்வமாக விளங்கும் தெய்வா சாமியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு, பெரும் வெற்றியை பெற்றது.
இதற்கு முன்னணி ஹாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டார்.அந்த விழாவில் ரன்வீர் சிங், தெய்வா சாமியை ஒரு பெண் தெய்வம் என்றும், படம் அவமதிப்பாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துளுமொழி பேசும் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதால், ரன்வீர் சிங் நேற்று மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு, “மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, பெங்களூரு ஐகிரவுண்டு போலீசில் நடிகர் ரன்வீர் சிங்கின் பேச்சை எதிர்த்து வக்கீல் பிரஸ்னவ் மதல் புகார் அளித்துள்ளார். அவர் புகாரில், ரன்வீர் சிங்கின் கருத்துகள் லட்சக்கணக்கான இந்துகள் மற்றும் கர்நாடகாவில் துளுமொழி பேசும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Ranveer Singhs speech Rishabh Shettys Kandhara shocked Tulu people