பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழப்பு!- முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல்
producer AVM Saravanan passes away Chief Minister Stalin consoles family
பழம்பெரும் திரையுலக தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அஞ்சலியின் போது அவர் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதல் கூறினார்.

வயது மூப்பால் இன்று காலை உயிரிழந்த ஏ.வி.எம். சரவணனின் உடல், சென்னை வடபழனி பகுதியில் அமைந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலர்களுக்காக அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த தயாரிப்பாளருக்கு திரையுலகத்தாரும், அரசியல் தலைவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி, அவரது திரை உலகில் ஏற்படுத்திய தாக்கத்தையும், கலாச்சார பண்பையும் போற்றுகின்றனர்.
English Summary
producer AVM Saravanan passes away Chief Minister Stalin consoles family